Homeசெய்திகள்இந்தியாபா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!

பா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!

-

 

பா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!
Photo: Parakala Prabhakar

பா.ஜ.க. நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.

தங்கம் விலை மேலும் குறைந்தது!

சென்னையில் நடந்த ‘தி க்ரூக்கட் டிம்பர் ஆப் நியூ இந்தியா’ என்ற புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரகலா பிரபாகர், நாட்டின் மதச்சார்பற்ற பன்மைத்துவ, ஜனநாயக ஆதாரங்களை மத்திய அரசு சீரழித்து வருகிறது. 13.5 கோடி இந்தியர்கள் பல பரிமாணத்திலான வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது சந்தேகம் அளிக்கிறது.

‘மல்டிடைமன்சல் பாவர்டி’ எனப்படும் பல பரிமாணத்திலான வறுமை நிலைத் தொடர்பான நிதி ஆயோக் நடத்திய விமர்சனம் செய்துள்ள அவர், ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றை விட்டுவிட்டு, வருவாய் நிலையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னாள் உள்ள நிலைக்கூட திரும்பவில்லை. இப்படியான சூழலில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டாலும், அக்கட்சி நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என்று பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.

MUST READ