
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (அக்.06) மதியம் 02.00 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, விளையாடிய நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
“மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்”- தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியிலேயே தனது வெற்றியைப் பாகிஸ்தான் அணி பதிவுச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


