spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி!

உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி!

-

- Advertisement -

 

உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி!
Photo: ICC

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.

we-r-hiring

பசுமை நினைவுகளோடு பழைய காரை ஓட்டிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் கே.எல்.ராகுல் 66 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களையும், லபுஷ்ஷேன் 58 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி

50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த 1987, 1999, 2003, 2007, 2015- ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி 2023- லும் வெற்றி பெற்றுள்ளது.

2003 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி 2023- லும் தோற்றது. இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீருடன் வெளியேறினார்.

MUST READ