- Advertisement -

நீண்ட வருடங்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பழைய காரை பசுமை நினைவுகளோடு ஓட்டிச் சென்றார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!
சென்னை அடையாறில் உள்ள பூங்காவில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று (நவ.19) காலை அதற்காக புறப்படும் போது, முதலமைச்சர் தனது பழைய காரில் செல்ல விரும்பினார்.
இதையடுத்து, பழைய காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ஓட்டிச் செல்ல, முதலமைச்சருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் பயணித்தார். பழைய நினைவுகளை சுமந்தபடி, மாநகரின் சாலைகளில் முதலமைச்சர் பயணிக்க, இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.


