Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை!

-

- Advertisement -

 

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை!
Photo: BCCI

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கியது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுச் செய்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இணை நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது. எனினும், சுப்மன் கில் 7 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்து, ஸ்டார்க் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சை எதிர்கொண்டது ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களை மட்டுமே எடுத்தார்.

“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு கம்மின்ஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணை இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

24 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்தது. கே.எல்.ராகுல் 24 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

MUST READ