
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹஸ்லேவுட் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல், சம்பா தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்து
இதைத் தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.