spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்

கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்

-

- Advertisement -

கோ பட நடிகையும், ராதாவின் மகளுமான கார்த்திகாவுக்கு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா ராதா, இரண்டாவது மகள் துளசி. இதில் மூத்த பெண் கார்த்திகா, கோ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். கே.வி.ஆனந்த் இயக்கி இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் துளசி அறிமுகமானார்.

we-r-hiring
கோ படத்தில் நடித்த கார்த்திகாவிற்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். தமிழில் வருவதற்கு முன்பாகவே ஜோஷ் என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்திலும் அவர் நடித்தார். ஆனால், 2015-ம ஆண்டிற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி விட்டார். கார்த்திகா நடித்துக்கொண்டிருக்கும் போதே மும்பையில் உள்ள ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற கல்லூரியில் தொழில்முறை பட்டப்படிப்பை படித்து முடித்தார். தற்போது அவர் படங்களில் நடிக்காமல், அவரது தந்தையின் தொழில்களை கவனித்து வருவதாக தெரிகிறது.

இதனிடையே அவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதை நடிகை கார்த்திகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில், ராதிகா, அம்பிகா, பூர்ணிமா, பாக்யராஜ் மற்றும் சிரஞ்சீவி உள்பட 80-களின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்

MUST READ