Homeசெய்திகள்விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது!

-

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது!
Photo: BCCI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 07) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து கிடுகிடுவென உயரும் தங்கம் விலை

இரண்டு ஆண்டு காலம் பல்வேறு மோதல்களுக்கு பிறகு, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஐ.சி.சி. தொடர் என்பதால், கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் போலவே இந்த இறுதிப் போட்டியும் இரு நாடுகளுக்கும், நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், 44 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 1 போட்டி டை ஆகியிருக்கிறது. கடைசி 10 போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிராவிலும், 1 போட்டி டையிலும் முடிவடைந்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா 38 முறையும், இந்தியா 14 முறையும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் நடைபெறுவதால், ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அதிக போட்டிகளில் விளையாடி உள்ளது.

ஓவல் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால், இந்திய அணி பந்து வீச்சில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ