அற்புதமாக விளையாடி வரும் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட விரும்பும் விராட் கோலி, இந்த முறையும் தனது ஆதிக்கத்தைத் தொடர விரும்புகிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 5 அரைச்சதங்கள், எட்டு சதங்கள் உட்பட 1979 ரன்களை அடித்துள்ளார். அவரது சராசரி 48.93 ஆக உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அகமதாபாத் மைதானத்தில் 186 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணி உடனான மோதலுக்கு விராட் கோலி தயாராக உள்ள நிலையில், அவர் இறுதிப் போட்டியில் பல்வேறு சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
16 ஐசிசி நாக் அவுட் இன்னிங்ஸில் விராட் கோலி, 620 ரன்களை எடுத்துள்ளார். ஐசிசி நாக் அவுட் இன்னிங்ஸில் அவரின் சராசரி 51.66 ஆகும். இந்த போட்டியில் அவர் 112 ரன்களை எடுத்தால், ஐசிசி நாக் அவுட் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அவருக்கு முன்னதாக, 18 ஐசிசி நாக் அவுட் இன்னிங்ஸில் ரிக்கி பாண்டிங் 731 ரன்களும், 14 ஐசிசி நாக் அவுட் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 657 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு எதிராக 60 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராக, அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறவுள்ளார். லயனுக்கு எதிராக போஜராஜ 570 ரன்களை அடித்துள்ளார்.
எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!
72 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இங்கிலாந்தில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களில் விராட் கோலி 56 போட்டிகளில் 2,574 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.