Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி

அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி

-

p

கட்சியினர் மொத்த பேரும் மேடையில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக தப்பினார் அன்புமணி ராமதாஸ்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேருந்து நிலையத்தின் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பாமக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

k

அன்புமணி வந்ததும், முதலில் பேருந்து நிலையம் அருகே இருந்த பாமக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் மேடைக்கு சென்றார். கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்ததால் அவர் சிரமப்பட்டு மேடைக்கு சென்றார்.

அன்புமணி மேடை ஏறியதும் கூட்டத்தினர் அனைவரும் மேடையின் மீது ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது. இதை கவனித்துவிட்ட அன்புமணி மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அவர் காயமின்றி தப்பினார்.

அதன் பின்னர் டேபிள் கொண்டுவரப்பட்டது. அதன் மேல் ஏறி நின்று கொண்டு கட்சியினரிடையே பேசினார் அன்புமணி.

MUST READ