spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு

இந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு

-

- Advertisement -

rn

ஆளுநர் ஆர்.என்.ரவி எது பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சலசலப்பை ஏற்படுத்துகிறது. சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றே ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ராஜாக்களால் ஒன்றும் நாடு உருவாகல; ரிஷிகளாலும் வேதங்களாலும் தான் உருவானது இந்தியா என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஆளுநர் .

we-r-hiring

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடந்த பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஆளுநர் ஆர். என். ரவி. விழாவில் அவர் பேசிய போது, அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா செயல்படுத்தி வருகின்றது. செயற்கை நுண்ணறிவு மூலம் அனைத்து துறைகளிலும் நவீனங்களை புகுத்தி வருகின்றது.

10 வருடங்களுக்கு முன்பு வரைக்கும் செல்போன் டேட்டா உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் பங்களிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது உலக அளவில் 24 சதவிகிதம் செல்போன் டேட்டா பங்களிப்பு செய்கிறது இந்தியா என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஆளுநர், உலக அளவில் வேகமாக வளரும் நாடாக இருக்கிறது இந்தியா. புதிய இந்தியா இளைஞர் கையில் தான் இருக்கிறது என்று சொன்னவர், நம் நாடு எந்த ராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல. ரிஷிகளாலும் வேதங்களாலும் தான் இந்தியா உருவாக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த அறிவு ஒளி தான் மக்களை வழிநடத்துகின்றது. அதனால் தான் இந்திய மக்கள் மீளிர்கின்றார்கள் என்றார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

MUST READ