
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார். ஐபிஎஸ் வருண்குமார் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். கருணாநிதி என்ன இறைத்தூதரா…? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா?” என சவால் விட்டுள்ளார்.
