Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.80ஆயிரம் கையாடல்.. தவெக ஒன்றிய செயலாளர் ஃபோட்டோவுடன் புகார்..!!

ரூ.80ஆயிரம் கையாடல்.. தவெக ஒன்றிய செயலாளர் ஃபோட்டோவுடன் புகார்..!!

-

- Advertisement -

ரூ.80ஆயிரம் கையாடல்.. தவெக ஒன்றிய செயலாளர் ஃபோட்டோவுடன் புகார்..!!
நாகை அருகே பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (வீடு கட்டும் திட்டம்) பயனாளியின் பில் தொகையை முறைகேடு செய்ததாக, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் புகைப்படத்துடன் பாதிக்கப்பட்ட நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடிப் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் நாகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​பாதியிலேயே நின்ற ‘பிரதமர் வீடு கட்டும் திட்டம்’

​நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2018-2019-ஆம் நிதியாண்டில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்கள் பலர், வீடுகளைப் பாதியிலேயே முடிக்காமல் அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் தங்களின் சொந்த வீடின்றிப் பெரும் தவிப்பிற்குள்ளாகினர்.

we-r-hiring

​தவெக நிர்வாகி மீது கையாடல் குற்றச்சாட்டு! 

​இந்நிலையில், திருமருகல் ஒன்றியம் போலகம் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர், இத்திட்டத்தின் கீழ் தனக்கு அரசு வழங்கிய தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
​அரசு வழங்கும் மொத்தத் தொகையில் ரூ.1,20,000 மட்டுமே ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.80,000 பில் தொகையை, தற்போதைய திருமருகல் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக (தவெக) செயலாளர் வீரமணி என்பவர், ஸ்டாலினுக்குத் தெரியாமல் முழுமையாக எடுத்துக் கொண்டு, வீட்டின் கட்டுமானப் பணிகளையும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து வீரமணியிடம் ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று கேட்டபோது, “உங்களது வங்கிக் கணக்கில் பணம் விரைவில் வந்துவிடும்” என்று கூறி காலங்கடத்தி வந்துள்ளார்.

ரூ.80ஆயிரம் கையாடல்.. தவெக ஒன்றிய செயலாளர் ஃபோட்டோவுடன் புகார்..!!
​போட்டோவுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடும்பம்

​இந்த முறைகேடு மற்றும் பண மோசடி குறித்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் (BDO) புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
​இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், இன்று தனது குடும்பத்தினருடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து முற்றுகையிட்டார்.

பின்னர், தவெக நிர்வாகி வீரமணியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ஏழை விவசாயியான தனக்குச் சேர வேண்டிய ரூ.80,000 பணத்தைக் கையாடல் செய்து ஏமாற்றிய தவெக நிர்வாகி வீரமணி மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

​ஏற்கனவே பல்வேறு அரசியல் சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், தவெக ஒன்றியச் செயலாளரின் புகைப்படத்துடன் பயனாளியே கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ