spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின - 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின – 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

-

- Advertisement -

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது மதிப்பெண்களை பார்த்து வருகின்றனர்.

we-r-hiring

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 04ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in, https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராமவர்மா, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 8 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 85.75% தேர்ச்சி பெற்றுள்ளன. அறிவியல் பாடப் பிரிவுகளில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.

MUST READ