சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை விமானங்கள் என 10 ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாக்கினர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று கொல்கத்தா, புவனேஷ்வர், பெங்களுர், திருவனந்தபுரம், சிலிகுரி ஆகிய இடங்களுக்கு புறப்படும் 5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சென்னைக்கு பெங்களுரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரி ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டிய 5 விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிர்வாகக் காரணங்களால் இந்த 10 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல், ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.