spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு

நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு

-

- Advertisement -

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவஙகள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் நாகையை சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

we-r-hiring

இந்த நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள்,  நெடுந்தீவு அருகே இன்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருநதனர். அப்போது, அங்கு வந்த இலங்கை படற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் சிறைபிடித்தனர்.

தொடர்ந்து கைதான மீனவர்களை இலங்கை கடற்படை முகாமிற்கு அழத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, நாளை காலை மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

MUST READ