Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

-

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொறுப்பு, ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தினகரனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். மேற்கு மண்டல புதிய ஐ.ஜியாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். மகேந்தகுமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை வகித்த செந்தில்குமாரி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

tamilnadu assembly

ஐ.பி.எஸ். அதிகாரி நஜ்முல் ஹூடா நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக இருந்த மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ்குமார், சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆக ஐபிஎஸ் அதிகாரி என்.தேவராணி, ஐபிஎஸ் அதிகாரி அபிநவ்குமார், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ