
கீழடியில் நடந்து வரும் ஒன்பதாவது கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எட்டு கட்டமாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒன்பதாவது கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, ஒன்பது குழிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தங்க அணிகலன், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கு உருவங்கள் மற்றும் வட்ட வடிவிலான சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சலக்கோல்கள், செப்பு ஊசி, எலும்பில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள், இரும்பில் வார்த்தெடுக்கப்பட்ட ஆணிகள் என 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழாய்வில் தரைத் தளத்திற்கு கீழே சுமார் 2 அடி ஆழத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் மீன், ஏணி குறியீடுகளும் காணப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காவது கட்ட அகழாய்வில் 17 முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்
கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலான தொல்பொருட்கள் கிடைத்து வருவது, வரலாற்று ஆய்வாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.