spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

-

- Advertisement -

 

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!
File Photo

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், வீதிகளில் குவிந்துக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

சென்னையில் படபடக்கும் பட்டாசுகளையும் வானில் வர்ணஜாலங்களை நிகழ்த்திய வாணவேடிக்கைகளையும் வெடித்து மக்கள் உற்சாகமாக பண்டிகையைக் கொண்டாடினர். இதனால் சென்னை முழுவதும் பட்டாசுக் கழிவுகள் குவிந்துக் கிடக்குகின்றன.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

நேற்று (நவ.12) மட்டும் 100 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், இன்று (நவ.13) காலை முதல் மேலும் குவிந்துள்ள பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டாசுக் கழிவுகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் வீதம் 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ