spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2வது சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இயந்திரம் கழுகு!

2வது சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இயந்திரம் கழுகு!

-

- Advertisement -

 

2வது சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இயந்திரம் கழுகு!
Photo: CMRL

2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் கழுகு கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப்நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியைத் தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

உறியடி விஜயகுமாரின் ‘ஃபைட் கிளப்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் கழுகு கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப்நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது

மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

“ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் 01- ஆம் தேதி அன்று சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கி வழித்தடம்-4-ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது. “கழுகு” என பெயரிடப்பட்ட அதன்இணையான சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026 இல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த சூரி ….ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன்(கட்டுமானம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் AEON நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ