Homeசெய்திகள்தமிழ்நாடு2 ஆவது ரோப் கார் திட்டம் - கிடப்பில் உள்ளதாக புகார்

2 ஆவது ரோப் கார் திட்டம் – கிடப்பில் உள்ளதாக புகார்

-

- Advertisement -
2 ஆவது ரோப் கார் திட்டம் – கிடப்பில் உள்ளதாக புகார்
ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பழனி முருகன் கோவில் 2 ஆவது ரோப்கார் திட்டதால் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2 ஆவது ரோப் கார் திட்டம் - கிடப்பில் உள்ளதாக புகார்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு மழைப்படியில் ஏறி நடந்து செல்ல முடியாதவர்கள் ரோப்காரிலும், வின்ச் என்று சொல்லக்கூடிய மின் இழுவை ரயிலிலும் மலை கோயிலுக்கு செல்கின்றனர்.

2004 ஆம் ஆண்டு முதல் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்த ரோப் காரில் 400 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

we-r-hiring

2 ஆவது ரோப் கார் திட்டம் - கிடப்பில் உள்ளதாக புகார்

இதனால் பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 1200 பேர் வரை பயணிக்கும் வகையில் 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் இரண்டாவது ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோப் கார் அமைக்கும் பணியை தொடங்கியது. மண் பரிசோதனை, பாறைகளின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்பட்டு ஒரு சிறிய கட்டிடம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

அதன் பிறகு ரோக்கார் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஒரு ரோப் கார் மட்டுமே இயக்கப்படுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2 ஆவது ரோப் கார் திட்டம் - கிடப்பில் உள்ளதாக புகார்

இரண்டாவது ரோப் கார் திட்டத்திற்கு ஒவ்வொரு மானிய கோரிக்கையின் போதும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் அப்படி இருந்தும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டாவது ரோப் கார் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

MUST READ