Homeசெய்திகள்தமிழ்நாடு"மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (அக்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.27) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

“தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்’- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வரும் நவம்பர் 02- ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 01- ஆம் தேதி முதல் இதுவரை 44%- க்கும் குறைவாக மழைப் பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ