திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திணடுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கார் வேகத்தடை மீது வேகமாக ஏறியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த மோகன்ராஜ், ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.