- Advertisement -
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 34 பேர் உயிரிழந்தனர். இதில் 7 குழந்தைகள், 17 பெண்கள் அடங்குவர். இந்த கோர சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோருக்கு தனது ஆறுதல்களையும் நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.