spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

-

- Advertisement -

 

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
Photo: TN Govt

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.06) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடந்துள்ள நிலையில், கனமழை நின்றுள்ளது. அத்துடன், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தென்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கேயே உள்ளனர்.

இந்த நிலையில், புயலால் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாத நிலையில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (டிச.06) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயலால் ஏற்கனவே, இரண்டு நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்த நிலையில், மூன்றாவது நாளாக நாளையும் (டிச.06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

“மின்விநியோகம் சீராகிறது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

இதனிடையே, புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிச்செய்யும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

MUST READ