Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம்

சென்னையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம்

-

சென்னையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

tn assembly

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்
  • வெள்ளம், கனமழையை எதிர்கொள்ள வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.320 கோடியில் மேற்கொள்ளப்படும்
  • ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ.7,145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • கண்ணகிநகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டில் ரூ.20 கோடியில் விளையாட்டு பொழுதுபோக்கு மையம் அமைக்கப்படும்.
  • சென்னை அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் கட்டப்படும். இதற்கு ரூ.621 கோடி ஒதுக்கீடு.
  • வடசென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு
  • சென்னை புறவழிச்சாலை திட்டத்துக்கு ரூ.1,847 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு
  • ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கவும், தற்போதுள்ள பேருந்துகளை சீரமைக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • மகளிர் இலவச பயண திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு
  • பூவிருந்தவல்லி- கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2025 ஆம் ஆண்டு நிறைவுபெறும்
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவையில் ரூ.9, 000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2030-க்குள் கூடுதலாக 14,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக ரூ.77 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்
  • சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
  • வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1,600 கோடியில் மேம்படுத்தப்படும்.

MUST READ