Homeசெய்திகள்தமிழ்நாடுதிண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி!

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி!

-

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த ஜார்ஜ், தனது மனைவி அருணா மற்றும் 2 பிள்ளைகளுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது ஜார்ஜ், இருசக்கர வாகனத்தின் மீது எதிரே கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ