ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம் துவக்கப்பட்டு 57 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஆவடியில் செயல்படும் மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம் துவக்கப்பட்டு 57 ஆண்டு துவங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் மாவட்ட சைக்கிள் அசோஷியேஷன் மற்றும் டிவின் பிரதர்ஸ் சைக்கிள் ஸ்டோர் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை ஆவடி ரிசர்வ் காவல்ப்படை பயிற்சி மைய டி.ஐ.ஜி ராஜிவ் ராஜன் கொடி அசைத்து துவைக்கி வைத்தார். இதில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்தியாளய பள்ளியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் பயிற்சி மையத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் பேரணி நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு சைக்கிள் பயிற்சியால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பேட்டில் சைக்கிள் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள வீரர்களை உருவாக்கும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த பேரணியில் சிஆர்விஎப் பள்ளி முதல்வர் மாணிக்கச்சாமி,டிவின் பிரதர்ஸ் உரிமையாளர் பாலு பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!