Homeசெய்திகள்தமிழ்நாடுஇஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொல்லி வீடியோ எடுத்த 7 பேர் கைது

இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொல்லி வீடியோ எடுத்த 7 பேர் கைது

-

இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொல்லி வற்புறுத்திய 7 பேர் கைது

வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கும்பல் சிக்கியது.

ஹிஜாப்

பொது இடங்களில் தனிமனித உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாதலமாக விளங்கும் வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில மக்களும் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். சிலர் கோட்டை புல்வெளியில் அமர்ந்து பொழுதுபோக்கி செல்வதும் நடக்கிறது. கோட்டையில் காதல் ஜோடிகளும் சுற்றித்திரிவது உண்டு. இதனால் சமூக விரோதிகள் சிலர் சுற்றித்திரியும் காதல்ஜோடிகளிடம் அத்துமீறல் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து கண்காணித்து வந்தனர். தற்போது காவலர்கள் பற்றாக்குறையால் போலீஸ் கண்காணிப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் வேலூர் கோட்டையில் கடந்த 27ம் தேதி காதல்ஜோடிகள் கோட்டையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களை குறுக்கிட்ட ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி, அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சைபர் குற்றத்தின் கீழ் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வீடியோவை பரப்பிய நபர்கள் மீது விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வீடியோவை யாரும் சமூக வலைதளங்கள் மற்றும் இதர தளங்களில் பகிரக்கூடாது. மீறி வீடியோ பதிவினை சமூக வலைதளத்திலோ மற்றும் இதர தளங்களிலோ பரப்பும் நபர்கள் மீது சைபர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளர். இந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்து, அதனை ஆய்வுக்காக சைபர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

MUST READ