நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே! அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.