தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (அக்.14) தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம் முடிந்தது. 2வது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்த கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய சட்டத் திருத்த முன்வடிவுகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.35,000 ஆக உயர்த்தும் மசோதா,
- தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தும் மசோதா.
இதே நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக்குப் பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேலும் ஒரு முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா என கூறப்படுகிறது.
நேற்று(அக்.14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இரு மொழிக் கொள்கையை உறுதிபடுத்தும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழியின் உரிமை மற்றும் மரியாதையைப் பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி நடமாட்டம் !! பீதியில் மக்கள்!!