spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுRTE மாணவர் சேர்க்கை…தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு…

RTE மாணவர் சேர்க்கை…தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு…

-

- Advertisement -

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை வருகின்ற அக்டோபர் 31 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.RTE மாணவர் சேர்க்கை…தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு…கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை சமர்ப்பிக்கும்மாறு தனியார் பள்ளிகளின் இயக்குனர் ஒரு சுற்றறிக்கை பிறப்பித்திருந்தாா். இதனை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில், மாணவர் சேர்க்கை முடிந்து இரண்டாம் பருவம் துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு இந்த சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. இதனால் பள்ளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன என தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், கல்வி உரிமைச் சட்டத்தையும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் நடப்பாண்டில் நடைமுறைபடுத்தலில் தாமதம் ஏற்பட்டது. எனவே, தனியார் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனியார் பள்ளிகள் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனுமதி அளித்தது. அதேவேளையில், புதிய மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதன் மூலம், கல்வி உரிமைச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட தாமதம் குறித்த விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

பல் பிடுங்கிய விவிகாரம்… ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக மாட்டாரா? நீதிபதி சரமாரி கேள்வி…

MUST READ