spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி

-

- Advertisement -

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி

சாலையை கடக்க முயன்ற நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அணு விஞ்ஞானியாக பணியாற்றுபவர் சுஜாதா. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகிலேயே உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் ஷர்வன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இன்று சுதந்திர தினம் என்பதால் தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மாணவன் மீது மோதியது.

we-r-hiring

இதில் ஷரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த சக மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

MUST READ