Homeசெய்திகள்தமிழ்நாடுமேலூர் அருகே சரக்கு லாரி மீது கார் மோதல்... மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி

மேலூர் அருகே சரக்கு லாரி மீது கார் மோதல்… மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி

-

- Advertisement -

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை  மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகிகள் தலைவா புலி, அமிர்தராஜ் ஆகியோர் நேற்று சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் 3 பேரும் ஒரே காரில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பச்சமுத்து உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் போலீஸார், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிமுக நிர்வாகிகள் 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ