Homeசெய்திகள்தமிழ்நாடுபாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி

-

- Advertisement -

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர் கூலித்தொழிலாளி செய்து வருபவர். இவரது மனைவி ரங்கநாயகி (26).  இவர்களுக்கு ரட்சகன் என்ற மகன் உள்ளார்.

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
கூலித்தொழிலாளி பலி

குபேந்திரனுக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருப்பதால்  மது அருந்து விட்டு வீட்டிற்கு வருவார். சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.

we-r-hiring
பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
கிணற்றில் விழந்து பலி

இந்த சம்பவம் குறித்து அவரது அண்ணன் அஜித்விடமும், ரங்கநாயகிடமும் தகவல் தெரிவித்தார். உடனே ரங்கநாயகி அங்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி விழுந்து அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் அங்கு வந்து குபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ