spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி

-

- Advertisement -

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Image

பொத்தேரி பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்து சென்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கோனாதி பகுதியில் இருந்து பொத்தேரி பகுதிக்கு வருவதற்காக ரயில்வே கேட்டை கடந்து பத்தி இருக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளது. அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக அதிவேகமாக மணலை ஏற்றிச் சென்ற கனரக லாரி சாலையை கடக்கும் முயன்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது.

we-r-hiring

இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த 6 பேர் மீது கனரக லாரி ஏறியதில் உடல் நசுங்கி 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Accident

முதல் கட்ட தகவலில் உயிரிழந்தது, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாம் ஆண்டு மாணவர் ஜஸ்வந்த் (19), என்பதும் பொத்தேரியில் சேர்ந்த பார்த்தசாரதி (52) மற்றும் பவானி என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருவரின் உடல் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக நசுங்கி உள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ