Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வித்துறைக்கு விழுந்த பேரிடி... பட்ஜெட்டில் ரூ.2,341 கோடி கட்! ஷாக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள்!

கல்வித்துறைக்கு விழுந்த பேரிடி… பட்ஜெட்டில் ரூ.2,341 கோடி கட்! ஷாக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள்!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு முக்கியத் துறைகளுமே நிதி வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.கல்வித்துறைக்கு விழுந்த பேரிடி... பட்ஜெட்டில் ரூ.2,341 கோடி கட்! ஷாக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள்!பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விரிவான விவரங்கள் வருமாறு

பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கீடு ரூ.2,240 கோடி சரிவு
“மாநிலத்தின் முதன்மைத் துறையான பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.44,527 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை விட ரூ.2,240 கோடி கணிசமாகக் குறைக்கப்பட்டு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

we-r-hiring

உயர் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு குறைவு: பேராசிரியர்கள் வேதனை
“உயர் கல்வித்துறைக்கு ஏற்கனவே போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.8,494 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் ரூ.8,393 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், கடந்த ஆண்டை விட ரூ.101 கோடி நிதி குறைக்கப்பட்டு கல்வியாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.”

ஆய்வுத்துறை பாதிக்கும் அபாயம்
உயர் கல்வியில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகளில் போதிய கவனம் செலுத்துவதற்குத் தேவையான நிதி கிடைக்காமல் ஏற்கனவே பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் தவித்து வருகின்றனர். தற்போது மேலும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தர மேம்பாடு ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும் என பேராசிரியர்கள் தரப்பில் பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தவெக அரசின் அதிரடி பட்ஜெட்… குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் அறிவிப்பு!

MUST READ