Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

-

மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள பத்லாபூர் பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகளுக்கு, அந்த பள்ளியில் பணிபுரிந்த துப்புரவு தொழிலாளி அக்சய் ஷிண்டே என்பவர் பாலியல் தொல்லை அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தானேவில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அக்சய் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அக்சய் ஷிண்டேவின் மீது அவரது முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் தலுஜா சிறையில் இருந்த அக்சயை காவலில் எடுக்க போலீசார் நேற்று சென்றனர். இதற்காக வாகனத்தில் அவரை அழைத்து சென்றபோது, அக்சய் காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். இதனை அடுத்து, மற்றொரு காவலர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த அக்சய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  சிறுமிகள் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

MUST READ