Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

-

மேலூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை தாக்கி படுகாய படுத்திய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்டம் மேலூர் நீதித்துறை நடுவர் மன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் விஜயபாரதி என்பவரை பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த ராமநாதன் உள்ளிட்ட சிலர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி படுகாய படுத்திய நிலையில் தற்போது திவ்யபாரதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வழக்கறிஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலூர் அருகே உள்ள பல்லவராயன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபாரதி வழக்கறிஞர். மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிரஸ்ட் ல் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த டிரஸ்ட்க்கு சொந்தமான கட்டடத்தில் பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அதிமுகவை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்தில் இருந்த விஜயபாரதியை ராமநாதன் உள்ளிட்ட சிலர் கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த விஜயபாரதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ராமநாதன் மற்றும் முருகன் இருவரை கைது செய்துள்ள மேலூர் போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.வழக்கறிஞர் விஜயபாரதி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று நீதிமன்றம் வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அரசு தீவிர படுத்த வேண்டும் எனவும், வழக்கறிஞரை தாக்கி படுகாயப்படுத்திய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள், தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களை கைது செய்யாமல் மெத்தன போக்கோடு செயல்படும் காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

MUST READ