spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல் மனைவி அளித்த கொலை மிரட்டல் புகார்.. நடிகர் சரவணன் விளக்கம்..!!

முதல் மனைவி அளித்த கொலை மிரட்டல் புகார்.. நடிகர் சரவணன் விளக்கம்..!!

-

- Advertisement -

நடிகர் சரவணன்

இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் சவரணனின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சரவணன். குறிப்பாக அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்திருந்தா சரவணைன் ‘சித்தப்பு’ கேரக்டர் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். அத்துடன் அவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ, சென்னை ஆவடி காவல் ஆணையத்தில் நடிகர் சரவணன் மீது புகார் அளித்திருக்கிறார்.

அதில், சரவணன் அவரது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து, தன்னை அடித்து துன்புருத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் வீடியோ ஆதாரம் ஒன்றையும் போலீஸிடம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் நடிகர் சரவணன் , இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே, வேறொரு வீட்டில் சூர்யா ஸ்ரீ தனியாக வசித்து வருவதாக தெரிகிறது. அந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் சூர்யா ஸ்ரீ குறிப்பிட்டுய்ள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மனைவியுன் புகார் குறித்து நடிகர் சரவணன் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தனது வளர்ச்சி பிடிக்காமல் சூர்யா ஸ்ரீ இப்படி செய்து வருகிறார். நாயகன் படத்தில் வருவது போல் விபச்சாரம் செய்து வந்தவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.

சூர்யா ஸ்ரீ மது பழக்கத்திற்கு அடிமையானவர். தனக்கும் தனது இரண்டாவது மனைவிக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். அதற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளது. தனது குடும்ப விஷத்தை வெளியே சொன்னால் அன்னார்ந்து பார்த்து எச்சில் துப்புவது போன்றுதான், ஆனால் வேறு வழியில்லாமல் தற்போது கூறுகிறேன். எனக்கும் சூர்ய ஸ்ரீக்கு நடந்தது குறித்து அனைவருக்கும் தெரியும்.

சூரிய ஸ்ரீ தற்போது வரை எனக்கு சொந்தமான வீட்டில் தான் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு நாந்தான் emi கட்டி வருகிறேன். இப்போது அவர் எனக்கு எதிராக செயல்படுவதால், இனியும் அவரை பரமரிக்க முடியாது.” என்று தெரிவித்தார்.

MUST READ