spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா!

திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா!

-

- Advertisement -

திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைந்தார். இந்த நிகழ்வின்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா சத்யராஜ், திமுக பெண்களுக்கும், அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிக்கும் கட்சி என்றும், அதன் காரணமாக தான் திமுகவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஊட்டச்சத்து நிபுணரான தனக்கு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார். திமுகவில் இணைந்த தனக்கு தந்தை சத்யராஜ் எப்போதும் ஆதரவாக இருப்பார் என்றும் திவ்யா தெரிவித்தார். மேலும் கட்சியில் எந்த பொருப்பு வழங்கினாலும் கடுமையாக உழைப்பேன் என்றும் திவ்யா சத்யராஜ் குறிப்பிட்டார்.

MUST READ