Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியில் பேசக்கூறி துன்புறுத்தல்- சித்தார்த் வேதனை

இந்தியில் பேசக்கூறி துன்புறுத்தல்- சித்தார்த் வேதனை

-

- Advertisement -

மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசக்கூறி சிஆர்பிஎஃப் வீரர்கள் 20 நிமிடங்கள் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் புகார் கூறியுள்ளார்.

insta

we-r-hiring

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் சித்தர்த், “காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம். என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். கடுமையாக நடந்துகொண்டனர். விமான நிலையத்தில் எனது பெற்றோர்களை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்தினார்கள். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தை காட்டுகிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்பி, “ மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலை அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ