spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு அபராதம்!

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு அபராதம்!

-

- Advertisement -

 

Actor Vijay

we-r-hiring

நடிகர் விஜய் சென்ற கார் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!

கடந்த ஜூன் 17- ஆம் தேதி அன்று 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கல்வி விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதிப் பொறுப்பாளர்களை அழைத்து பாராட்ட முடிவு செய்த நடிகர் விஜய், நேற்று மதியம் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது, அக்கறை சந்திப்பில் நடிகர் விஜய்யின் வாகனம், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதால், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!

சிக்னலை மதிக்காமல் நடிகர் விஜய்யின் கார், வேகமாக சென்ற காட்சிகள் வெளியான நிலையில், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ததாகவும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ