மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு
இன்று (ஜூலை 12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 198 கனஅடியில் இருந்து 161 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 80.29 அடியில் இருந்து 79.40 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 41.36 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையின் நீர்மட்டம் குறைந்ததாலும், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.