Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு- டிஎன்பிஎஸ்சி

குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு- டிஎன்பிஎஸ்சி

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கு 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

அண்மையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்2023ம் ஆண்டிற்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அதாவது 1754 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது. எனவே தமிழக அரசு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும், SC/ST மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பட்டியலின மக்களின் நிரப்பப்படாத காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கு 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 9870 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தகவல் வெளியிட்டுள்ளது. ஜுலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். தற்போது கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும், பல மாநகராட்சிகளில் காலியான பணியிடங்களுக்கு சேர்த்து கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

MUST READ