spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர்

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர்

-

- Advertisement -

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர்

மதுரை அதிமுக எழுச்சி மாநாடு வெற்றி பெற கடலூரில் கடலுக்கு அடியில் மாநாடு பேனர் வைத்த கட்சி தொண்டர்களின் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADMK banner

அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 20-ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அதிமுக மாநாடு வெற்றி பெற கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையில் திரளாக மாநாட்டில் பங்கு பெறுவதற்காக, மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆழ்கடல் வீரர்களைக் கொண்டு கடலூர் பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வு பேனரை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் பிரித்திவி ஏற்பாட்டில் ஆழ்கடல் வீரர்கள் கடல் அடியில் அதிமுக பேனரை வைத்து அசத்தியுள்ளனர்.

ADMK banner

we-r-hiring

கடலுக்கடியில் வைக்கப்பட்ட பேனரை ஆயிரக்கணக்கான மீன்கள் தொட்டு சென்ற காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்கின்றன.

MUST READ