Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழர்களை ஆளுநர்களாக்கி அழகு பார்க்கும் கட்சி பாஜக- ஜெயக்குமார்

தமிழர்களை ஆளுநர்களாக்கி அழகு பார்க்கும் கட்சி பாஜக- ஜெயக்குமார்

-

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் சென்னை தியாகராய நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

we-r-hiring

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக பொறுப்பேற்க இருப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பாராட்டு தெரிவிக்கிறோம். பார்க்கும் போது எல்லாம் கலகலப்புடன் பேசக்கூட என் நண்பருக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. நீதிமன்ற வளாகத்திலேயே கொலை நடந்து இருப்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை சுதந்திரமாக யாரும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களை ஆளுநர்களாக்கி அழகு பார்க்கும் கட்சி பாஜக மட்டும்தான், தமிழர்களை பாஜக அடையாளம் காட்டுகிறது.

ஏடிஎம் கொள்ளை, வழிப்பறி கொள்ளை நடக்கிறது. காவல் துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது. உள் துறை அமைச்சர் முதலமைச்சர் காவல் துறையினர் முடிக்கி விட்டு செயல்பட விட வேண்டும். காவல் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் செயல்பட வில்லை. ஒரே நாளில் ஒன்பது கொலைகள், நீதிமன்ற படுகொலைகள் இல்லை. உள்துறை அமைச்சராக அவர் என்ன செய்கிறார். குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

எங்கள் ஆட்சியில் இது போல் மோசமாக இல்லை. ஜில் ஜில் ரமாமணி என அதிமுகவை துரைமுருகன் பேசி இருப்பது குறித்து தில்லான மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் வைத்தி கதாபாத்திரம் போல் தான் அவர்கள் ஒரு ஒரு பக்கம் மாற்றி பேசுவார்கள் என விமர்சித்தார்.

MUST READ