Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி

-

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி

மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

kp munusamy

தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் நாங்கள் யார் என்பதை நிருபிப்போம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “மதுரை எழுச்சி மாநாடானது வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வித்திடும் வகையில் இருக்கும். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. காவிரி ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் காவிரி நீரை திறந்து விட வேண்டியது கர்நாடக அரசின் கடமை. தன்னுடைய வசதிக்காக கட்சியும், ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கிற சுயநலவாதி கூட்டம் தான் திமுக. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டும்” என்றார்.

MUST READ