Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் - ஜெயக்குமார்

ஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் – ஜெயக்குமார்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் நடைபெறுவதாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

we-r-hiring

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர்போல் ஆளுங்கட்சியினர் செலவழிக்கின்றனர். வாக்காளர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி கொடுக்கின்றனர். பணநாயகத்தைவிட நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்புகிறோம். ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார்.

சப்பாத்தி, பரோட்டா, டீ, பஜ்ஜி, ஆம்லைட் போடுபவர்களே திமுகவின் அமைச்சர்களாக உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை இதைத்தான் கொலை கொலையா முந்திரிக்கா என சொல்வோம். இந்த ஆட்சியில் போலீஸ் மூளை செயல்படவில்லை. அம்மா ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவம், இந்த ஆட்சியில் ஏண்டா போடுகிறோம் என நினைக்கிறார்கள்” எனக் கூறினார்.

MUST READ