Homeசெய்திகள்தமிழ்நாடுஈடில்லா ஆட்சி; ED ரெய்டே சாட்சி- ஜெயக்குமார் விமர்சனம்

ஈடில்லா ஆட்சி; ED ரெய்டே சாட்சி- ஜெயக்குமார் விமர்சனம்

-

ஈடில்லா ஆட்சி; ED ரெய்டே சாட்சி- ஜெயக்குமார் விமர்சனம்

மலாக்கத்துறை கைது செய்ய முற்பட்டவுடன் நெஞ்சுவலி என நாடகத்தை அரங்கேற்றி சிறுபிள்ளை போல அழுது புலம்புவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்.... அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!
File Photo

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

jayakumar

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடியா அரசு என் மீது பொய் வழக்குகள் போட்டு நள்ளிரவில் கைது செய்து உடைமாற்ற கூட அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல்துறை வேனிலேயே மூன்று மணிநேரம் அங்குமிங்கும் கொண்டு சென்று அலைக்கழித்தனர்‌.
அனைத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம். இன்று அமலாக்கத்துறை கைது செய்ய முற்பட்டவுடன் நெஞ்சுவலி என நாடகத்தை அரங்கேற்றி சிறுபிள்ளை போல அழுது புலம்புகிறார். அகப்படும் வரை திருடன் அரசனைப் போல!!! ஈடில்லா ஆட்சி! ED ரெய்டே சாட்சி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ